சங்கு என்பது விஷ்ணு வைத்திருக்கக்கூடியது. அதேசயம் இறப்பு போன்ற காரியங்களுக்கும் சங்கு ஊதப்படுகிறது. அதனால் சங்கு அமங்கலப் பொருளாகக் கருதப்பட்டு, வீட்டில் வைக்கக்கூடாது என்பார். ஆனால் அது வாஸ்துப்படி வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும் என்று பார்ப்பது மிக அவசியம்.
எல்லாரும் வீடு கட்டும் போது வாஸ்து பார்த்து கட்டுவது தான் வழக்கம். காரணம் வீட்டினுள்
நேர்மறை சக்தி கிடைக்க வாஸ்து சாஸ்திரம் நிறைய நன்மைகளை தருகிறது. அந்த வகையில்
நிறைய வீடுகளில் நுழைவாயிலில் சங்கை புதைத்து வைத்து வீடு கட்டுவார்கள். சிலர் வீட்டினுள்
பூஜை அறைகளில் சங்கை வைத்து வழிபடுவது வழக்கம். கடலில் இருந்து கிடைக்கும் இந்த
பளிங்கு போன்ற சங்கு இந்து வேதங்களில் ஒரு புனிதமான பொருளாக கருதப்படுகிறது. இந்து
மதத்தின் பரமாத்மா ஆன விஷ்ணு பகவானின் வடிவமாக இந்த சங்கு பார்க்கப்படுகிறது.
அப்படிப்பட்ட சங்கிற்கு ஒரு சிறந்த குணம் உண்டு என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.
ஆமாங்க இந்த சங்கு வீட்டினுள் நுழையும் எதிர்மறை ஆற்றலை அழித்து நேர்மறை ஆற்றலை
ஈர்க்கும் தன்மை கொண்டுள்ளது என்கின்றனர் வாஸ்து சாஸ்திர வல்லுநர்கள்.