கொரோனா வைரஸ் காரணமாக, அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில், 1,858 பேர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க் நகரில் மட்டும் 800 பேர் உயிரிழந்துள்ளனர்

வாஷிங்டன் : கொரோனா வைரஸ் காரணமாக, அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில், 1,858 பேர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க் நகரில் மட்டும் 800 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரசுக்கு, அமெரிக்காவில் இதுவரை 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,854 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், கொரோனா பாதிக்கப்பட்டு, 1,736 பேர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க் நகரில் மட்டும் 800 பேர் உயிரிழந்துள்ளனர். அங்குமட்டும், 1,40,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர், ஏப்ரல் 4ல் கொரோனாவால் 1,344 பேர் உயிரிழந்தது அதிகமாக இருந்தது.