பிப்ரவரி 1 அன்று கர்நாடகாவில் நடந்த கம்பாலா எருமைப் பந்தயத்தில் 142 மீட்டர் தூரத்தை 13.42 நொடிகளிலேயே 28 வயதாகும் ஸ்ரீனிவாச கௌடா கடந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சென்ற ஞாயிறன்று பஜகோலி ஜோகிபேட்டு எனும் ஊரைச் சேர்ந்த நிஷாந்த் ஷெட்டி என்பவர் 143 மீட்டர் தூரத்தை தனது அணியின் எருமைகளை விரட்டிக்கொண்டு 13.61 நொடிகளில் ஓடிக் கடந்துள்ளார் என்று கம்பாலா எருமை பந்தைய ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி கணக்கிட்டால் அவர் முதல் 100 மீட்டர்களை 9.51 நொடிகளில் ஓடிக் கடந்துள்ளார். இது ஸ்ரீனிவாச கௌடாவின் 9.55 நொடிகள் எனும் நேரத்தைவிட குறைவு என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
- கம்பாலா: மத்திய அரசின் வாய்ப்பை மறுத்த ஸ்ரீநிவாச கவுடா - இதுதான் காரணம்
- எருமை பந்தயத்தில் ஓடி வேகத்தில் உசைன் போல்டை விஞ்சினாரா இவர்?
ஸ்ரீநிவாஸா கௌடா கர்நாடக முதல்வர் எடியூரப்பாவால் நேரில் அழைத்து பாராட்டப்பட்டார். அவருக்கு மூன்று லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் அப்போது வழங்கப்பட்டது.