சகல வளம் தரும் குபேர விளக்கு ஏற்றி வழிபடும் முறைகள்

குபேர விளக்கு ஏற்றி வழிபட்டு நம் வாழ்வில் செல்வமும், வளமும் பெற்று பெருவாழ்வு வாழலாம்.


செல்வத்தின் அதிபதியாக குபேரர் விளங்குகிறார். அவரை நாம் வணங்கி வர அவரின் அருள் கிடைத்து வாழ்வில் வளம் பெறலாம். அவரின் அருள் பெற குபேரர் விளக்கில் தீபம் ஏற்றி வழிபடலாம்.

குபேர விளக்கில் தீபம் ஏற்ற சரியான நேரம் :
குபேர விளக்கை ஏற்ற சரியான தினமாக வியாழக் கிழமை பார்க்கப்படுகின்றது. அன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணிக்குள் இந்த குபேர விளக்கை ஏற்றி பூஜை செய்வது உகந்தது.குபேர விளக்கை ஏற்றி எப்படி வழிபட்டு, மகாலட்சுமியை நம் வீட்டிற்கு அழைப்பது என்பது குறித்து இனி பார்ப்போம்..

குபேர விளக்கை ஏற்றும் முன் செய்ய வேண்டியவை :
குபேரருக்கு விருப்பமான வியாழக்கிழமை தினத்தில் காலையில் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.

அன்று மாலை வீட்டின் வாசலில் செம்மண் பட்டை இட்டு அலங்காரம் செய்ய வேண்டும்.

அதன் மீது பச்சரிசி மாவில் கோலம் போட வேண்டும்.

வாசல் நிலைப்படிக்கு சந்தனம் தெளித்து, மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும்.

அதன் பின்னர் கரும்புள்ளி இல்லாத ஒரு எலுமிச்சைப் பழத்தை எடுத்து, அதை இரண்டாகாக வெட்டவும். ஒரு
துண்டில் மஞ்சள், மற்றொரு துண்டில் குங்குமம் தடவி, நிலைப்படிக்கு இருபுறமும் ஒவ்வொன்றை வைக்கவும்.

அதன் பின் நிலைப்படியின் இருபக்கமும் மலர்களை வைக்கவும்.