ஊட்டச்சத்து நிபுனர் ருஜுதா திவேகர், தன்னை Instagram-ல் பின்தொடருவோருக்கு, இது சீத்தாப்பழ சீசன் என்றும் மொத்தமாக வாங்கி வைத்து சாப்பிட இது தான் சரியான நேரம் என்று நினைவூட்டியுள்ளார்.
நம் வீட்டு பெரியோர்கள் 'சீசன் உணவுகளை சாப்பிடுங்கள்' என அறிவுரை கூறக்கேட்டிருப்போம். பல மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் சீசனில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக வாங்கி உண்ணுமாறு கூறுகிறார்கள். பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளில் முழு அளவிலான ஊட்டச்சத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது, இது அந்தந்த பருவத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர், இந்தியாவில் உள்ளூர் மற்றும் பருவகால உணவை உட்கொள்வதில் முன்னணி மற்றும் உறுதியான ஆதரவாளர்களில் ஒருவர். Bollywood Divas கரீனா கபூர், கரிஷ்மா கபூர் மற்றும் வருண் தவான் உள்ளிட்டோர் ருஜுதா திவேகரின் வாடிக்கையாளர் பட்டியலில் உள்ளனர்.
ஒரு கூடை முழுக்க custard apple பழங்கள் இருக்கும் படத்தை தந்து Instagram பக்கத்தில் வெளியிட்ட ருஜுதா திவேகர், பழத்தின் பல்வேறு நன்மைகளை சுட்டிக்காட்டினார். கடினமான, பச்சை நிற செதில்களை மேல் தோலாகக் கொண்ட இப்பழம் இப்போது பருவத்தில் உள்ளது. எனவே, அதை சேமித்து வைப்பதற்கான சரியான நேரம் இது என்று திவேகர் தனது இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களுக்கு நினைவுபடுத்தினார்.